×

தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நீதிபதி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, நவ. 5: தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்  வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ்விஸ்வநாத் துவக்கி வைத்தார்.  தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்  வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. இந்த  முகாமை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி  துவக்கி வைத்தார். மகிளா கோர்ட் நீதிபதி குமார் சரவணன், முதலாவது கூடுதல் மாவட்ட மர்வு நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதிபதி  ஹேமா, சார்பு நீதிபதிகள் சாமுவேல் பெஞ்சமின், மாரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ மணி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்குதாரர்கள், பொதுமக்கள்   கலந்து கொண்டனர். இந்த  முகாமில் சுமார் 500 நபர்களுக்கு நிலவேம்பு  குடிநீர்  வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சார்பு நீதிபதி  சாமுவேல் பெஞ்சமின் செய்திருந்தார். இந்த முகாம் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

Tags : Judge ,camp ,Tuticorin Court ,
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...