×

பகலில் கூலி தொழிலாளி இரவில் கொள்ளையன்: வேலூர் ஆசாமி கைது

வேளச்சேரி: பகலில் கூலி வேலை செய்துவிட்டு, இரவில் கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையடித்த வேலூர் ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சாம் வின்ெசன்ட், எஸ்ஐக்கள் இளங்கனி, அஸ்லாம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளச்சேரி பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடை ஒன்றின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், வேலூர் மாவட்டம் கடம்பூர் அறிவழி நகர் பள்ளி தெருவை சேர்ந்த பூபதி (36) என்பதும், பள்ளிக்கரணையில் உள்ள ஒரு லாரி செட்டில் கூலி வேலை செய்து வருவதும் தெரிந்தது. மேலும், பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் பள்ளிக்கரணை, வேளச்சேரி, கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.

வேலூர் மாவட்டத்தில் இவர் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளது. சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி பள்ளிக்கரணைக்கு வந்து, வேலை செய்தபடியே, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Vellore Asami ,
× RELATED பகலில் கூலி தொழிலாளி இரவில் கொள்ளையன்: வேலூர் ஆசாமி கைது