குளச்சல் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

குளச்சல், நவ. 5:குளச்சல், சாஸ்தான்கரை ரோட்டை சேர்ந்தவர் மூர்த்தி(69). கட்டிட தொழிலாளி.  இவர் தனது வீட்டின் அருகே புதிதாக கட்டப்படும் கட்டிட பணியில் ஈடுபட்டு  வந்தார். நேற்று முன்தினம் காலை கட்டிடத்தை பார்க்க சென்றனர். அப்போது  முதல் மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக மூர்த்தி கீழே விழுந்தார். இதில்  பலத்த காயமடைந்த அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.  இதுகுறித்து அவரது மகன் ராம்ஜி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   



Tags : Kulachal ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு