×

டெல்லியில் வக்கீல் மீது போலீசார் தடியடி குமரியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்


நாகர்கோவில், நவ. 5:  டெல்லியில் வக்கீல் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நாகர்கோவிலில் வக்கீல்கள் நேற்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  டெல்லி திஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக வக்கீலுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட வாய்த்தகாறில் வக்கீல்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். தடியடி நடத்திய காவலர்கள், அதிகாரிகளை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு பாண்டிச்சேரி வக்கீல்கள் சங்கங்களில் கூட்டுக்குழு சார்பில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று குமரிமாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் ஆகிய கோர்ட்டுகளில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

 நாகர்கோவிலில் கோர்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வக்கீல்கள் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். துணை தலைவர் அனிட்டர் ஆல்வின், செயற்குழு உறுப்பினர் சதா, சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் வக்கீல் சங்க தலைவர் பாலஜனாதிபதி தொடங்கி வைத்தார். அகில இந்திய வக்கீல்கள் சங்க மாவட்ட செயலாளர் மரிய ஸ்டீபன், வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்கள் உதயகுமார், வெற்றிவேல், ராஜகுஞ்சரம், தமிழ்நாடு பாண்டிச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு துணை தலைவர் அசோகன், செயற்குழு உறுப்பினர் மதியழகன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags : Protests ,lawyers ,Delhi ,Daddy Kumari ,
× RELATED டெல்லி விவசாய போராட்டத்துக்கு ஆதரவாக...