×

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கருத்தரங்கு

நாகர்கோவில், நவ. 5:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான திவாகரனின் 17வது நினைவு தின கருத்தரங்கு நாகர்கோவிலில் நடந்தது. நாகர்கோவில் மாநகர செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், நூர்முகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கருத்தரங்கில் மாநிலகுழு உறுப்பினர் லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், அண்ணாத்துரை, கண்ணன், தங்கமோகன், சேகர், விஜய மோகனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Marxist Seminar ,Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்