×

வழக்கு விசாரணையின்போது ஆள் மாறாட்டம் செய்த போலீசார்? முதியவர் கலெக்டரிடம் புகார்

நாகர்கோவில், நவ.5:  வழக்கு விசாரணையின்போது தான் ஆஜராகாமலேயே ஆள்மாறாட்டம் செய்து வழக்கை முடித்து விட்டனர் என்று முதியவர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். தக்கலை அருகே மேக்காமண்டபம் மூலச்சல் பகுதியை ேசர்ந்தவர் தாசையா. இவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது வீட்டருகே உள்ள கிணறு ஒன்றில் மழைநீர் பாய்ந்து தண்ணீர் குடிப்பதற்கு பயனற்றதாக மாறியுள்ளது. இது தொடர்பாக கேட்டபோது அப்பகுதியை சேர்ந்த இருவர் என்னை சரமாரியாக தாக்கினர். இதனால் காயம் அடைந்த நான் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

இது தொடர்பாக தக்கலை ேபாலீசார் என்னிடம் வாக்குமூலம் வாங்கி புகார் மனு பெற்று சென்றனர். ஆனால் இதுவரை போலீசார் புகார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக எஸ்.பி, தக்கலை டி.எஸ்.பி.யிடம் மனு அளித்தேன். தக்கலை டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டார். ஆனால் மனுதாரராகிய நான் செல்லாமலேயே ஆள் மாறாட்டம் செய்து எனது வழக்கை முடித்துள்ளனர். நான் விசாரணைக்கு வரவில்லை என தெரிவித்த போதும் போலீசார் எனது புகாரின் மீது எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : trial ,Collector ,elderly ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...