×

களியங்காடு சிஎஸ்ஐ சேகரம் சார்பில் அகில உலக திருமுறைப்பள்ளி தினவிழா பவனி

திங்கள்சந்தை, நவ.5:  குமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராலயத்தில் களியங்காடு, நாகர்கோவில்,  சாந்தபுரம், புத்தளம், தாமரைகுளம், கொட்டாரம் உள்பட மொத்தம் 41 சேகரங்கள்  உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் வாரம் அகில உலக திருமுறைப் பள்ளி  தினவிழா கொண்டாப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அகில உலக  திருமுறைப்பள்ளி தினவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.அடையாளமாகும்  அரும்புகள் என்ற கருப்பொளுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. 41  சேகரங்களிலும் வெகு விமரிசையாக நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அந்தந்த சபையை  சேர்ந்த போதகர்கள் தலைமையில், ஆலய நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்,  சிறுமிகள் உள்பட சபை அங்கத்தினர் பங்கேற்றனர். பவனியில் பங்கேற்றவர்கள்  கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி சென்றனர்.

களியங்காடு சேகரத்துக்கான அகில  உலக திருமுறைப்பள்ளி தினவிழா பேரின்பபுரம் சிஎஸ்ஐ ஆலயத்தில் மாலை 3  மணிக்கு தொடங்கியது. இதில் 22 சிஎஸ்ஐ சபையின் போதகர்கள் பங்கேற்றனர். அதைத்  தொடர்ந்து ஆலயத்தில் இருந்து பவனி தொடங்கியது. போதகர்கள் தலைமையிலான  குழுவினர் பாடல்கள் பாடியவாறு பேரணியாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக  சென்ற பவனி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதையடுத்து பவனியில்  பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதற்கிடையே களியங்காடு சிஎஸ்ஐ  ஆலயத்தில் கடந்த 13ம்தேதி திருமுறை அறிவு தேர்வு, வேத வினாடி வினா, பாடல்  போட்டி, பேச்சு போட்டி ஆகியவை நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Ceylon Global Thrift School ,
× RELATED ரோஜாவனம் கல்லூரியில் உலக செவிலியர் தினவிழா