×

சென்ட்ரல் - கூடூர் இடையே மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்ட்ரல் - கூடூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே இன்று பிற்பகல் 2.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் தடா - சூலூர்பேட்டை இடையேயும், சூலூர்பேட்டை - வேளச்சேரி இடையே இன்று மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சூலூர்பேட்டை - தடா இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், அரக்கோணம் - வேலூர் கன்டோன்மென்ட் இடையே 4ம் தேதி பிற்பகல் 1.05 மணிக்கு இயக்கப்படும் ரயில், வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம் இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், கவுரா ஜங்ஷன்- யஷ்வந்த்பூர் ட்ராண்டோ எக்ஸ்பிரஸ் 3ம் தேதி காலை 10.50 புறப்பட்டு மறுநாள் 75 நிமிடம் தாமதமாக சித்ரி-மகேந்திரவாடி சென்றடையும். கோவை ஜங்ஷன்- சென்ட்ரல் சென்னை எக்ஸ்பிரஸ் 4ம் தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு அதேநாள் 10 நிமிடம் தாமதமாக மகேந்திரவாடி சென்றடையும். சென்னை சென்ட்ரல்- மங்களூர் சென்ட்ரல் மேற்கு கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 4ம் தேதி பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு அதே நாள் 50 நிமிடம் தாமதமாக சித்ரி சென்றடையும்.

அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடம்: ஜோலார்பேட்டை - அரக்கோணம் இடையே 10ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் காட்பாடி- அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும், 10ம் தேதி காலை 11 மணிக்கு இயக்கப்படும் யஷ்வந்த்பூர்- ஹவுரா ஜங்ஷன் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு 2.10 மணி நேரமும், 10ம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு இயக்கப்படும் பனஸ்வாதி-பாட்னா ஜங்ஷன் ஹம்சேபர் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு 20 நிமிடமும், வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம் இடையே 10ம் தேதி மாலை 5.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் காட்பாடிக்கு 40 நிமிடமும், 10ம் தேதி காலை 9 மணிக்கு இயக்கப்படும் கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷன்- தனபூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் அதே நாளில் மகேந்திரவாடி ரயில் நிலையத்திற்கு 30 நிமிடமும், 10ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படும் கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி- சென்னை சென்ட்ரல் ஏசி டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் தளங்கை ரயில் நிலையத்திற்கு 15 நிமிடமும் தாமதமாக வந்தடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : cancellation ,Southern Railway ,Cochin ,Central ,
× RELATED நிவர் புயல் காரணமாக தென்...