×

உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி துவக்கம்

நாமக்கல், நவ.1: நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு மின்னணு இயந்திரம் மூலம் நடைபெறுகிறது. இதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து 1569 கன்ட்ரோல் யூனிட், 3168 பேலட்யூனிட் எந்திரங்கள் கடந்த மாதம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு இங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.நேற்று அவற்றை, பெங்களூருவை சேர்ந்த இன்ஜினியர்கள் சரிபார்த்தனர். அப்போது இயந்திரத்தின் பழுதான பாகங்கள் சரி செய்யப்பட்டு புதிய பாகங்கள் பொறுத்தப்பட்டது. பேட்டரியின் திறன் குறித்தும் இன்ஜினியர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து 10 நாட்களும் குறிப்பிட்ட அளவிலான இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும் என உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Commencement ,inspection ,election ,
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...