×

கபிலர்மலை வட்டாரத்தில் பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் சேர்ப்பு

பரமத்திவேலூர், நவ.1:கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், பிரதம மந்திரியின் நிதியுதவி வழங்கும் திட்டத்தில், விடுபட்ட விவசாயிகள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.  இத்திட்டத்தின் கீழ், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் உரிய ஆவணங்களான சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் புத்தகத்துடன் முகாமில் கலந்து கொண்டு, பதிவு செய்து முதலாம் தவணை, இரண்டாம் தவணை, மற்றும் மூன்றாம் தவணை நிதி உதவிகளைப் பெறலாம். மேலும் இன்று (நவ.1) சிறுநெல்லிக்கோயில், வடுகபாளையம், சோழசிராமணி, இருக்கூர், ஆனங்கூர், அ.கொந்தளம் ஆகிய இடங்களிலும் நவம்பர் 4ம் தேதி கபிலக்குறிச்சி, வடகரையாத்தூர், பெருங்குறிஞ்சி, பாண்டமங்கலம், பொன்மலர்பாளையம் ஆகிய இடங்களிலும் இதுதொடர்பாக முகாம்கள் நடக்கிறது.

அதேபோல், வரும் 5ம் தேதி பெரியசோளிபாளையம், கொத்தமங்கலம், குப்பிரிக்காபாளையம், பொத்தனூர், சேளூர் ஆகிய இடங்களிலும், 6ம் தேதி தி.கவுண்டம்பாளையம், குரும்பலமகாதேவி, தேவனாபாளையம், கோப்பணம்பாளையம், பிலிக்கல்பாளையம், ஆகிய இடங்களிலும், 7ம் தேதி ஜமீன் இளம்பள்ளி, கொளகாட்டுப்புதூர், அ.குன்னத்தூர், மி.குன்னத்தூர் ஆகிய இடங்களிலும் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முகாமிற்கு வர தவறிய விவசாயிகள், வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்களிடம் உரிய ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். கபிலர்மலை வட்டாரத்தில் தற்போது சம்பா நெல் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ₹471 பிரிமியம் தொகையை செலுத்தி, காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : region ,Kapillarmai ,
× RELATED ஆன்மீகத்தை வைத்து தில்லுமுல்லு...