×

புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் சேலம் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தல்சேந்த

மங்கலம், நவ.1: புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில், சேலம் செல்லும் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் இருந்து, சேலத்திற்கு தினமும் 600க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். இந்த பஸ் ஸ்டாப்பில் வழியாக மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல்லில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் 50க்கு மேற்பட்டவை இயக்கப்படுகிறது. தற்போது புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டதால், சேலம் செல்லும் பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக சென்று விடுகிறது. 10 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த பஸ்கள், தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.

இப்பகுதியில் சேகோ பேக்டரிகள், கோழிப்பண்ணைகள் மற்றும் 2 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளது. இங்கு பணியாற்ற வந்து  செல்லும் ஊழியர்கள், நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும், இந்த பஸ் ஸ்டாப்பில் நிழற்குடம் இல்லாததால் வெயிலிலும், மழையிலும் ஒதுங்கக்கூட இடமின்றி, பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சேலம் செல்லும் அனைத்து பஸ்களும் பாலத்திற்கு கீழ், புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Salem ,bus stop ,
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை