×

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியேற்பு

கிருஷ்ணகிரி, நவ.1:  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி தேசிய ஒற்றுமை நாள் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து, உறுதி மொழியை வாசிக்க, அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் அதை திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராமமூர்த்தி(பொது), கீதாலட்சுமி(நிலம்), ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், பிஆர்ஓ சேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Office ,Krishnagiri Collector ,
× RELATED நெல்லை அருகே மண்டல அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி