×

வலசக்கல்பட்டி ஏரியில் மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

கெங்கவல்லி, நவ.1: கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் மணல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் சுவேத நதி மற்றும் ஏரிகளில் மர்மநபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக, சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிக்கருக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி போலீசார் தனிப்படை அமைத்து சாத்தப்பாடி பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,  74.கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 74.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் ரஞ்சித்குமார்(21) என்பவரை கைது செய்தனர்.


Tags : lake ,Valasakalpatti ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு...