×

ஆத்தூரில் மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், நவ.1:  பைத்தூர் கிராம நிர்வாக அதிகாரியின் செயல்பாடுகளை கண்டித்து, ஆத்தூர் பழைய  பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கலைமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பைத்தூர், கல்லுகட்டு உள்ளிட்ட மலைகிராம மக்கள், சண்முகம்,  கிருஷ்ணன், பெரியசாமி, சடையன், தங்கம்மாள், தர்மலிங்கம், சேகர்,  பெரியம்மாள், வெண்ணிலா, பவளக்கொடி, சிவகாமி, வசந்தா உள்ளிட்ட 50க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags : demonstration ,Mass Communist ,Athur ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்