×

அயோத்தியாப்பட்டணத்தில் பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

அயோத்தியாபட்டணம், நவ.1:  அயோத்தியாப்பட்டணத்தில் பழுதடைந்த தார்சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.அயோத்தியாப்பட்டணத்தில் ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, அரூர்,  திருப்பத்தூர் செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக 24  மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. போதிய  பராமரிப்பு இல்லாததாலும், மற்றும் தொடர் மழை காரணமாக அயோத்தியாப்பட்டணத்தில்  உள்ள சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் பஸ்கள் மற்றும்  கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவை அடிக்கடி விபத்தில் சிக்குகிறது.வேகமாக செல்லும் வாகனங்களால் சாலையில் பள்ளத்தில் தேங்கியுள்ள  மழைநீர் கலந்த கழிவுநீர் தெறிப்பதால் டூவீலர் மற்றும் நடந்து செல்பவர்கள்  பாதிக்கப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து,  பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள்  கோரிக்கை விடுத்தள்ளனர்.

Tags : Ayodhya ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை...