×

பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சேறும், சகதியுமான சாலையால் அவதி

பென்னாகரம், நவ.1: பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்து செல்கின்றனர். கூட்டுறவு வங்கி முன்பு, மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர், சறுக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம், மண் சாலையை தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pennagaram Bus Stand Behind The Busy ,Sloppy Road ,
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்