×

மண்ணச்சநல்லூர் அருகே மாயமானவர் சடலமாக மீட்பு

மண்ணச்சநல்லூர், நவ.1: மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி கிராமத்தை சேர்ந்த பழனியாண்டி மகன் ஹாரிகிருஷ்ணன் (22). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஹரிகிருஷ்ணனின் தாய் செல்வி வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிலையாத்தியில் கொள்ளிடம் ஆற்றில் ஹரிகிருஷ்ணன் தண்ணீரில் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு ரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வாத்தலை போலீசார் கொலையா? மது அருந்தி நீரில் தவறி விழுந்து இறந்தாரா? முன் விரோதம் காரணமாக யாரேனும் அடித்து தண்ணீரில் போட்டுவிட்டு சென்றனரா என்ற பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்

Tags : Mannachanallur ,
× RELATED உடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி