×

டாக்டர்கள் போராட்டத்தால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல்கள் தேங்கவில்லை திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் தகவல்

திருச்சி, நவ.1: திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வரப்பெற்ற உடல்கள் தேக்கம் ஏதும் இல்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் டீன் தெரிவித்தார். இதுகுறித்து டீன் அர்ஷியாபேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மருத்துவர்கள் போராட்டம் செய்வதால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல்கள் தேங்கி இருப்பதாக பொய் செய்தி பரப்பி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாமதமின்றி பிரேத பரிசோதனைக்காக வரப்பெற்ற உடல்கள் மருத்துவக் குழுவால் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படுகிறது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (நேற்று) 2 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வந்துள்ளது. இவை அனைத்தும் மருத்துவக்குழுவால் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் உடல்கள் தேங்கி இருப்பதாக பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். இப்பொய் செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொய் செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Trichy Government Medical College ,
× RELATED திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி...