×

துறையூர் அருகே சிங்களாந்தபுரம் ஏரியில் மண்டிக் கிடக்கும் சீமைக்கருவேல முட்செடிகள் அகற்றி தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

துறையூர், நவ.1: துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரத்தில் ஏரி முழுவதும் மண்டிக்கிடக்கின்ற சீமைக்கருவேல முட்செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிங்களாந்தபுரம் ஏரியில் காடுபோல சீமைக் கருவேல மரங்கள், முட்செடிகள் மண்டிக் கிடக்கின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த ஏரி நிரம்பி பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியில் முட்செடிகள் அதிகமாக இருப்பதால் தேவையான நீரை தேக்கி வைக்க முடியாமல் போய்விடும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மழை வரும் முன்பே ஏரி கரைகளை பலப்படுத்துவதும், அதிலுள்ள முட்செடிகளை அகற்றவும், அரசின் கடமை. இதை துறையூர் பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஏரியின் கொள்ளளவை காட்டிலும் முட்செடிகளின் கொள்ளளவு அதிகமாக இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்பதற்கான இடம் குறைகிறது. மேலும் ஏரியின் கரையில் சில இடங்களில் குண்டும், குழியுமாக மழைநீர் அரித்து கரை குறுகி காணப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். எனவே இந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றி போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு இந்த முட்செடிகளை அழித்து ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.

Tags : Thuraiyur ,lake ,Sinhalendapuram ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு