×

நோயாளிகள் கடும் அவதி திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் தயார்

திருச்சி, நவ. 1: உள்ளாட்சி தேர்தலுக்கு திருச்சியில் வாக்குசாவடி மையங்கள் தயாராக உள்ளதாக கலெக்டர் சிவராசு நேற்று கூறினார். கர்நாடக மாநிலத்திலிருந்து 5,608 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,984 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் திருச்சி வந்தது. கலெக்டர் அலுவலகத்தின் 2வது தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில் முதல் கட்ட பரிசோதனையில் பெல் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை கலெக்டர் சிவராசு நேற்று பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் சிவராசு அளித்த பேட்டி: திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல், வாக்குசாவடி மையங்கள் தயாராக உள்ளது. மாநகராட்சி, 3 நகராட்சி, 16 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஊராட்சி பகுதிகளில் ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளோம். மாவட்டத்தில் நகர் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,142 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. நகர் புறத்தில் 10,24,201 வாக்காளர்கள், ஊரக பகுதிகளில் 12,21,017 வாக்காளர்கள் என மொத்தம் 22,45,218 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் எப்போது அறிவித்தாலும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஊரக வளர்ச்சித்திட்ட முகமை திட்ட அலுவலர் சங்கர், தேர்தல் நேர்முக உதவியாளர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : elections ,district ,Trichy ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...