நல்லம்பள்ளி அருகே பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

நல்லம்பள்ளி, நவ.1: நல்லம்பள்ளி அருகே கொட்டாவூரில் இருந்து மாட்டுக்காரன்னூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பலர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, அதிகாரிகளிடம் மக்கள் பல முறை புகார் கூறியும், நடவடிக்ைக எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,Nallampalli ,
× RELATED திருவள்ளூர் எம்டிஎம் நகரில் சாலையின்...