×

திருவில்லிபுத்தூரில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்தது

திருவில்லிபுத்தூர், நவ. 1: திருவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது பூவாணி கிராமம். அங்குள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிப்போர் கோவிந்தம்மாள் (50). தற்போது திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கோவிந்தம்மாள் வீட்டின் ஒருபக்க மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் வீடு இழந்து தவிக்கும் கோவிந்தம்மாள் தனக்கு நிவாரணம் வழங்க கோரி திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

Tags : house ,
× RELATED லால்குடியில் கடும் சூறாவளி காற்று...