×

டெங்கு காய்ச்சல் அறிகுறியை தொடர்ந்து ராஜபாளையம் ஜி.ஹெச்சில் எம்.பி., எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு

ராஜபாளையம், நவ. 1:  ராஜபாளையம் அரசு மருத்துவமனையையும், காந்தி சிலை அருகில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையையும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பொதுமக்களிடமும், நோயாளிகளிடமும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதையும், மருத்துவமனையில் உள்ள குறைகளையும் கேட்டறிந்தனர்.
கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்திலேயே அதிகளவு ராஜபாளையம் பகுதியில் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு அதிகமாக இருந்தது. இதன் காரணமாகவும் தற்போது திமுக தலைவர் உத்தரவின்படி திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவாமல் இருக்க பொதுமக்களை நேரில் சந்தித்து மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வுசெய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும் ராஜபாளையம் ெதாகுதி எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் இருவரும் ராஜபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருத்துவமனையில் கட்டிட வசதிகளையும் பணியாட்கள் வசதியையும் மேம்படுத்த வேண்டுமெனவும், காய்ச்சல் என பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் வந்தால் உடனடியாக சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், விரைவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி மற்றும் காலியாக உள்ள செவிலியர்கள், லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் மாரியப்பன்,  நகர செயலாளர் ராமமூர்த்தி, ஷியாம்ராஜா,  மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், நகர துணை செயலாளர் சரவணன், ராஜை மாணவர் அணி நாகேஷ்வரன், ராஜை ஐடி பிரிவு மாரிமுத்து, வார்டு செயலாளர் குழந்தை, பாரத் ராஜ்,  மருத்துவர்கள், செவிலியர்கள், நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : outbreak ,MLA ,
× RELATED ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு...