×

விருதுநகரில் பாஜக முப்பெரும் விழா பாதயாத்திரை

விருதுநகர், நவ.1: விருதுநகர்  அல்லம்பட்டி வாட்டர் டேங்க் அருகில் இருந்து பாஜக முப்பெரும் விழா  பாதயாத்திரை மாநில மகளிர் அணி தலைவி மகாலட்சுமி தலைமையில் துவங்கியது. பாதயாத்திரை காமராஜர் பைபாஸ் ரோடு, சாத்தூர் ரோடு, மெயின் பஜார் வழியாக  மதுரை ரோட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் நிறைவுற்றறது. பாதயாத்திரையில்  மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினவிழா, தமிழர்கள் கலாச்சாரத்தை  உலகம் அறிய செய்த மோடிக்கு பாராட்டு, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய்  பட்டேல் பிறந்த தினவிழா ஆகிய முப்பெரும் விழா பாதயாத்திரையில், சர்தார்  வல்லபாய் படேல்  கொள்கைகளை விளக்கி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி  சென்றனர். பாதயாத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும்  கதர் ஆடை உடுத்தி சென்றனர்.

Tags : BJP ,Biggest Day Traveler ,Virudhunagar ,
× RELATED விருதுநகர் தொகுதியில் வெடித்த பாஜக...