×

தேனியில் மழைக்கு 4 வீடுகள் சேதம்

தேனி, நவ. 1: தேனி தாலுகாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 25 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. தேனியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் அல்லிநகரத்தில் ஒரு வீடு இடிந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

காலை 8 மணி நிலவரப்படி தேனி தாலுகாவில் சராசரியாக 25 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த மழையால் கோவிந்தநகரத்தில் பாப்பா என்பவரது வீடு, அல்லிநகரத்தில் கோவிந்தராஜ் என்பவரது வீடு, ஊஞ்சாம்பட்டியில் பிலியன், முத்தையன் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் சேதமில்லை என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : houses ,
× RELATED திருமங்கலம் பகுதியில் மழை: கடை, வீடுகள் இடிந்து விழுந்தன