×

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர் வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை, நவ. 1: சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சிவகங்கையில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரயில் பாதை கிராசிங் உள்ளது. இதில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சுமார் மூன்று ஆண்டுகாலம் நடந்த பணிகள் முடிவடைந்து கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
சுரங்கப்பாதையில் ரயில்வே கிராசிங் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள், ரயில்வே ஸ்டேஷன், நகராட்சி அலுவலகம் செல்லும் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் செல்வர்.

இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிறிய அளவில் மழை பெய்தாலே சுமார் நான்கடி உயரத்திற்கு நீர் தேங்கி நிற்கிறது. நீர் வெளியேற வழி அமைக்காமல் உள்ளதால் தொடர்ந்து பல நாட்களுக்கு நீர் தேங்குகிறது. இதுபோல் சிவகங்கை அருகே வேம்பங்குடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
இங்கும் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. சிவகங்கை அருகே சூரக்குளம் மற்றும் காரைக்குடி, மானாமதுரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளிலும் இதே நிலை உள்ளது. சுரங்கப்பாதையின் கீழே சிமென்ட் தளம் உள்ளதால் நீர் உறிஞ்சப்படுவதற்கும் வழி இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிடைந்து வருகின்றனர்.

சுரங்கப்பாதை உள்ள பகுதிகளில் இந்த ஒரு வழியை தவிர மாற்று வழி இல்லாததால் செய்வதறியாது தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் கூறியதாவது: நீர் வெளியேற வழியில்லாமல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. சிறிய மழை பெய்தாலே பல நாட்கள் நீர் தேங்குகிறது. எப்படி இந்த வழியே செல்ல முடியும். உடனடியாக நீரை அகற்றவும், மழை நீர் நிரந்தரமாக வெளியேற தேவையான மாற்று ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Rain water motorists ,railway tunnel ,
× RELATED கத்தி முனையில் மிரட்டி வடமாநில...