×

பாலத்தில் சென்ற வேனில் திடீர் தீ

சிவகங்கை, நவ. 1: சிவகங்கை ரெயில்வே மேம்பாலத்தில் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை அருகே கவுரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (48). இவர் கவுரிப்பட்டி மேலக்காடு தோட்டத்தில் சம்பங்கி பூக்கள் உற்பத்தி செய்து வருகிறார். நேற்று பகல் 12 மணியளவில் பாண்டியன் தனது மனைவி கலைச்செல்வியுடன் சம்பங்கி பூக்களை மதுரைக்கு ஆம்னி வேனில் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு ஊருக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார்.
சிவகங்கை-தொண்டி ரோட்டில் ரயில்வே மேம்பாலத்தில் வரும்போது திடீரென வேனின் முன் பகுதியில் புகை வந்தது. இதை பார்த்த பாண்டியன் ஆம்னி வேனை நிறுத்திவிட்டு மனைவியுடன் கீழே இறங்கினார். சில நிமிடத்தில் வேன் தீப்பிடித்தது.

தகவல் அறிந்ததும் சிவகங்கை தீயணைக்கும் படை அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான தீயணைக்கும் வீரர்கள் வந்து தீயை அனைத்தனர். தீப்பிடித்ததில் வேனின் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது.இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : fire ,bridge ,
× RELATED காரில் திடீர் தீவிபத்து