×

பாலீஷ் போட்டு தருவதாக 2 பவுன் செயின் அபேஸ்

பேரையூர், நவ.1: டி.கல்லுப்பட்டி அருகே மூதாட்டியிடம் பாலீஷ் போடுவதாக நகையை திருடியதாக பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள பொட்டிபுரத்தை சேர்ந்தவர் சவுரிராஜன்(50). இவர் தனது தாய் ரெங்கநாச்சியாருடன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நகையை பாலீஷ் செய்து தருவதாக ரெங்கநாச்சியாரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கியுள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதையடுத்து தண்ணீர் கொண்டு வர ரெங்கநாச்சியார் வீட்டிற்குள் போனார். அப்போது நகையுடன் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
இது சம்மந்தமாக சவுரிராஜன் நாகையாபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பீகாரை சேர்ந்த ஹரிசர்மா மகன் ப்ரமோத்குமார் (20) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bow St. Abbey ,
× RELATED கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது