×

போதையில் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

திருமங்கலம், நவ.1: திருமங்கலம் அருகே குடிபோதையில் தனக்குதானே தீ வைத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமங்கலம் அருகேயுள்ள கல்லணையை சேர்ந்தவர் இளையராஜா(30). கட்டிடத்தொழிலாளி. திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன. குடிபழக்கத்திற்கு அடிமையான இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னையில் போதையில் தனக்குத்தானே உடலில் தீவைத்து கொண்டார். இதில் தீயில் கருகிய இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இளையராஜா உயிரிழந்தார். கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஈரோட்டில் சாலையில் தோண்டப்பட்ட...