மேலூர் அருகே 3 நாளாக மின்தடை கிராமமக்கள் மறியல்

மேலூர், நவ.1: மேலூர் அருகே கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அவதிப்பட்டு வந்த மக்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலூர் அருகில் உள்ள மேலவளவு ராசினாம்பட்டியில் தீபாவளி முதலே குறைந்த மின் அழுத்தத்தில் மின்சாரம் வந்துள்ளது. இதனால் மின்சாதன பொருட்கள் எதையும் பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அந்த குறைந்த அழுத்த மின்சாரமும் 2 நாட்களாக வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து நேற்றிவு மேலூர் நத்தம் சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். மேலவளவு போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் போலீசார் மின்தடை குறித்து பேசிய போது, அவர் பட்டென செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மின்வாரிய உயரதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டு நிலையை விளக்கி கூற, நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறி உள்ளனர். இதனால் தற்காலிகமாக கிராம மக்கள் ரோடு மறியலை கைவிட்டனர். ரோடு மறியலால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories:

>