×

இன்று சிறப்பு திட்டம் முகாம்

மதுரை, நவ.1: மதுரை மாவட்டத்தில் இன்று பல்வேறு கிராமங்களில் மக்களின் கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள ஏதாவதொரு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இன்று இம்முகாம் கள்ளிக்குடி தாலுகாவில் டி.கொக்குளத்திலும், மேலூர் தாலுகாவில் பூதமங்கலத்திலும், உசிலம்பட்டி தாலுகாவில் பன்னியானிலும், மதுரை கிழக்கு தாலுகாவில் வரிச்சியூரிலும், வாடிப்பட்டி தாலுகாவில் தாதம்பட்டியிலும் நடக்கிறது.

இதேபோல் மதுரை வடக்கு தாலுகாவில் செல்லணக்கவுண்டன்பட்டியிலும், பேரையூர் தாலுகாவில் அம்மாபட்டியிலும், மதுரை தெற்கு தாலுகாவில் பாப்பானோடையிலும், மதுரை மேற்கு தாலுகாவில் கொடிமங்கலத்திலும் நடக்கிறது. திருப்பரங்குன்றம் தாலுகாவில் சாக்கிலிப்பட்டியிலும், திருமங்கலம் தாலுகாவில் காண்டையிலும் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதி தாசில்தார்கள் கலந்துகொண்டு, விவசாயிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகின்றனர். வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்று மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள்.

Tags : project camp ,
× RELATED நீலகிாியில் 6 வட்டங்களில் 20ம் தேதி சிறப்பு திட்ட முகாம்