சோழவந்தானில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோழவந்தான், நவ.1: சோழவந்தான் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. செயல் அலுவலர் தனபால் தலைமை வகித்தார். இளநிலை அலுவலர்கள் முத்துக்குமார், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் குரு சங்கர் வரவேற்றார். செயல் அலுவலர் தனபால் கூறுகையில், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும், மழைநீர் தேங்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிதண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் கல்யாணசுந்தரம், சுந்தர்ராஜ், பசுபதி, சதீஸ், பூவலிங்கம், சோணை, செல்வம், அசோக், சந்தோஷ், பாலமுருகன், பாண்டி உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>