×

மாணவர் விடுதியில் ஆர்டிஓ ஆய்வு

திருமங்கலம், நவ.1: திருமங்கலம் பகுதியில் உள்ள மாணவர் விடுதிகளில் ஆர்டிஓ ஆய்வு நடத்தினார். திருமங்கலம் ஆர்டிஓ முருகேசன் நேற்று திருமங்கலம் மற்றும் அச்சம்பட்டியில் உள்ள மாணவ, மாணவியர்களின் விடுதியில் ஆய்வு நடத்தினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா, விடுதியில் வசதிகள் எவ்வாறு உள்ளது என மதிய இடைவேளையில் வந்த மாணவர்களிடம் ஆர்டிஓ விசாரணை நடத்தினார். தொடர்ந்து உச்சப்பட்டி கிராமத்தில் டெங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆர்டிஓ அங்கு வாக்காளர் பட்டியலையும் சரிபார்த்தார். பின்னர் அங்குள்ள மூன்று ஆழ்துளை கிணறுகளுக்கு உடனடியாக மூடி போடும்படி ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து உடனடியாக மூடிபோடப்பட்டது.

Tags : RTO ,student cafeteria ,
× RELATED நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262...