×

திண்டுக்கல்லில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

திண்டுக்கல், நவ. 1: திண்டுக்கல் காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் இந்திராகாந்தியின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கிழக்கு மாவட்ட துணை தலைவர் ராஜாஜி, மண்டல தலைவர் தனபால், மாநகர மாவட்ட துணை தலைவர் ஜபருல்லா, மாநகர மாவட்ட செயலாளர் அபிப், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன், மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் மதுரைவீரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

‘ஹேப்பி   பர்த்டே’ தமிழ்நாடு
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்படி முதற்கட்டமாக மொழிவாரி மாநிலமாக ஒரிசா 1936ல் அறிவிக்கப்பட்டது. தற்போது அதுவும் பேசும் மொழியான ஒடிசி என்ற பெயரிலே ஒடிசா என மாற்றப்பட்டு உள்ளது.

அதன்பின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை உள்ளடக்கிய, ‘மெட்ராஸ்  ராஜதானி’யையும் மொழிவாரியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். . இதை வலியுறுத்தி, சென்னையில் பொட்டி ராமுலு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவர் மறைவை தொடர்ந்து வன்முறை வெடிக்கவே, ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதாக 1953ல் அப்போதைய பிரதமர் நேரு அறிவித்தார். அதன்பின்னும் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கக்கோரி பல்வேறு தலைவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக மிகப்பெரிதாக இருந்த, மெட்ராஸ் மாகாணம் மெட்ராஸ் ஸ்டேட் எனவும் மற்றும் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா என தனித்தனி மாநிலங்களாக 1956 நவ.1ல் பிரிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவும் ஆந்திரா, தெலங்கானா என தங்களுக்கே பிரித்து கொண்ட கதை வேறு நடந்திருக்கிறது.

மலையாளம் பேசும் மக்களும் கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவ.1ம் தேதியை, ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். கேரளாவில், ‘கேரள பிறவி தினம்’ என்றும், கர்நாடகத்தில், ‘கன்னட ராஜயோத்ஸவா’ என்றும்  கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்படாமல் இருந்தது.  இது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவும், ஏக்கமாகவும் இருந்தது. இதை போக்கும் வகையில் தமிழகத்திலும் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவ.1ம் தேதி ஒவ்வோர் ஆண்டும், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி இன்று ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையில், அமைச்சர்கள், மொழி காவலர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் மிகச்சிறப்பாக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இது மற்ற அரசு விழாக்கைளை போல வழக்கமான நிகழ்ச்சியாக இருக்கும். அதற்கு பதிலாக மாணவ- மாணவியர் உட்பட, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தலாம். அதாவது அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம்,  தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை நினைவூட்டும், பல்சுவை நிகழ்ச்சிகளையும் நடத்த வரும் ஆண்டிலாவது அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Indira Gandhi Memorial Day ,Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...