×

ஒட்டன்சத்திம் அருகே லாரி மீது கார் மோதி வாலிபர் பலி நண்பர் படுகாயம்

ஒட்டன்சத்திரம், நவ. 1: ஒட்டன்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். நண்பர் படுகாயமடைந்தார். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (33). இவர் தனது காரில் நண்பர் பாலசமுத்திரத்தை சேர்ந்த நாகராஜ் (33) என்பவருடன் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் சென்று விட்டு சத்திரப்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை சேகர் ஓட்டி வந்தார். விருப்பாட்சி மேடு அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகராஜ் கை, கால்களில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்