×

உலக ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டி குடந்தை வீரர் மூன்று தங்கம் வென்று அபார சாதனை சொந்த ஊரில் நாளை வரவேற்பு அளிக்க ஏற்பாடு

கும்பகோணம், நவ. 1: சீனாவில் நடந்த ராணுவ வீர்ரகளுக்கான தடகள போட்டியில் கும்பகோணம் வீரர் பங்கேற்று 3 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். நாளை கும்பகோணம் வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். கும்பகோணம் சோலையப்பன்தெரு சேர்ந்தவர் குணசேகரன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் ஆனந்தன் (32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனந்தன் 2005ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2008ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை பிரிவில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் இடதுகால் துண்டிக்கப்பட்டது. பின்னர் இடதுகாலுக்கு செயற்கையாக பிளேடு பொருத்தப்பட்டது. அதைகொண்டு நடைப்பயிற்சி, வேகமாக ஓடும் பயிற்சியை மேற்கொண்டார்.

பின்னர் சிறிய வயது முதல் தடகள போட்டியில் பங்கேற்று ஓடி விளையாடிய ஆர்வத்தை கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சியகத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்நிலையில் சீனாவில் 140 நாடுகள் பங்கேற்ற 7வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டிகள் கடந்த 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது. இதில் ஆனந்தன் பங்கேற்று 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்ட போட்டிகளில் முதலிடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். கும்பகோணத்துக்கு நாளை வரும் ஆனந்தனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Athletics Competition for World Army Athletes ,
× RELATED கல்லணை அருகே பைக் மீது கார் மோதல் 3 பேர் காயம்