×

குடந்தை பொற்றாமரை குளத்தின் நீராழி மண்டபத்தை செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு விரைந்து அகற்ற வலியுறுத்தல்

கும்பகோணம், நவ. 1: கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதை விரைந்து அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் உள்ளது. இந்த குளத்தில் தாமரை மலரில் மகாலட்சுமியான கோமளவல்லி தாயார் தவமிருந்து சாரங்கபாணியை அடைந்தார் என்பது புராண வரலாறு. இப்புனித குளத்துக்கு வரும் பக்தா–்கள் சுகாதாரமாக நீராடுவதற்காக ரூ.72 லட்சம் மதிப்பில் 2016ம் ஆண்டு நீராழி மண்டபங்கள் சீரமைக்கப்பட்டது. இரண்டரை ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தின் நடுவில் தெப்பத்துக்கு வரும் சுவாமிகளை வைத்து தீபாரதனை செய்து பின் தெப்பத்தில் ஏற்றி சுற்றி வருவர். இதுபோல் கோயில் குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் இருந்தால் அந்த குளம் விஷேசமானதாகும், தெய்வீகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பது ஐதீகமாகும்.

2016ம் ஆண்டு நடந்த மகாமகத்தின்போது குளம் முழுவதும் வர்ணம் பூசியதுடன், செடி, கொடிகளை அகற்றி சூரிய ஒளி மின்விளக்குகள் பல லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. மகாமகம் முடிந்த பிறகு கண்டுகொள்ளாமல் விட்டதால் நீராழி மண்டபத்தில் செடி, கொடிகள், மரங்கள் முளைத்துள்ளனர். இதில் ஒரு அரசமரம் 10 அடிக்கு மேல் வளர்ந்துள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில் நீராழி மண்டபத்தின் பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நீராழி மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலை உள்ளது.
கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்போது புகழ்பெற்ற பொற்றாமரை குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தின் நிலையை பார்த்து பக்தர்கள் வேதனையடைகின்றனர். எனவே பொற்றாமரை குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில்மரம், செடி, கொடிகளை அகற்ற வேண்டும். பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும். பக்கவாட்டி சுவரை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hall ,Pottamarai Pond ,
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...