×

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தஞ்சை, நவ. 1: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது...