×

தாராபுரத்தில் பாஜ பேரணி

தாராபுரம், நவ.1:தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முப்பெரும் விழா பேரணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையின் போது தமிழர் பாரம்பரிய உடை அணிந்து வந்து வேட்டி, சட்டைக்கு பெருமை சேர்த்தமைக்காக பாராட்டு விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா, காந்திசங்கல்ப யாத்திரை நிறைவு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ருத்ரகுமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கோவை நந்தகுமார் சிறப்புரை ஆற்றினார். தாராபுரம் காடு அனுமந்தராய கோயில் வளாகத்தில் தொடங்கிய பேரணி தாலுகா அலுவலகம் பெரிய காளியம்மன் கோயில் வீதி வழியாக பழைய நகராட்சி அலுவலகம் முன்புள்ள காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Baja ,rally ,
× RELATED வண்டலூரில் மாநில தலைவர் முருகன்...