×

தொழில் நிறுவனங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

திருப்பூர், நவ.1: திருப்பூர், முதலிபாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசு ஒழிப்புப் பணிகள் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முதலிபாளையம் கிராம ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பணிகளை பார்வையிட்டு சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சுகாதார விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

அரசு பள்ளி, தனியார் பள்ளிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதை தொடர்ந்து, முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அஹ்ரஹாரபுரம், சிட்கோ தொழிற்பேட்டை தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலிபாளையம் துணை மின்நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள டெங்கு கொசு ஒழிப்பு பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) ஜெயந்தி, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,establishments ,
× RELATED தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி...