×

ரூ.22 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி,நவ.1:சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.22 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.  அவிநாசி அருகே சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில் 970 மூட்டை நிலக்கடை விவசாயிகள் கொண்டு வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 250 வரையிலும், இரண்டாவது ரகம் ரூ.5 ஆயிரத்து 400 முதல் ரூ.5 ஆயிரத்து 670 வரையிலும், மூன்றாவது ரகம் ரூ.4 ஆயிரத்து 900 முதல் ரூ.5 ஆயிரத்து 90 வரையிலும் ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தம் 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Groundnut auction ,
× RELATED சேவூர் விற்பனைக் கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்