×

பந்தலூரில் பழைய மீன் விற்பனை பொதுமக்கள் அதிர்ச்சி

பந்தலூர், நவ. 1 : பந்தலூரில் கேரளாவில் இருந்து பழைய மீன்களை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்வதால் உள்ளூர் மீன் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பந்தலூர் கேரளா மாநிலம் வயநாடு எல்லைப்பகுதியில் இருப்பதால் கேரளா வயநாடு பகுதிகளான பத்தேரி, கல்பட்டா, வடுவஞ்சால் போன்ற பகுதிகளில் விற்பனை செய்து மீதமுள்ள மீன்களை தமிழகம் பகுதியான தாளூர், சேரம்பாடி, பந்தலூர் போன்ற பகுதிகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் இரவு வரை விற்பனை செய்வதால் உள்ளூர் மீன் விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் கேரளாவில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யும் மீன்கள் பழையதாகவும்  தரமற்ற முறையில் இருப்பதால் அதை உண்ணும் மக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் விற்பனை செய்யும் மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர், நெல்லியாளம் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே கேரளாவில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் தமிழகப் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் மீன் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்ளூர் மீன் விற்பனையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : public ,
× RELATED புஞ்சைபுளியம்பட்டி அருகே தயாரிப்பு...