×

மேரிஸ்ஹில் பகுதியில் பழுதடைந்த நடைபாதையால் மக்கள் அவதி

ஊட்டி, நவ. 1: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மேரிஸ்ஹில் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருேகயுள்ள நடைபாதை உடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மேரிஸ்ஹில் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், சில குடியிருப்புகள் ரயில் நிலைய வளாகத்தை ஒட்டியுள்ளது. இவர்கள் கூட்செட் பகுதியில் இருந்து காந்தசல் மற்றும் படகு இல்லம் செல்ல ரயில்வே குடியிருப்பு வழியாக உள்ள சாலையையும், நடைபாதையையும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அப்பகுதியில் இருந்த பெரிய மண் திட்டு கரைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இந்த நடைபாதை மற்றும் சாலையை ஒட்டியுள்ள மண் திட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்புகளுக்கு முன் உள்ள நடைபாதையும் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்புகள் அந்தரந்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், குடியிருப்புகளுக்கு முன் பகுதியில் உள்ள சாலை முழுமையாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : sidewalk ,area ,Maryshill ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...