×

மின் வழித்தடத்தில் விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணி மும்முரம்

ஊட்டி, நவ. 1: ஊட்டி துணை மின் நிலையம் மற்றும் முள்ளிக்கொரை பகுதிக்கு செல்லும் மின் கம்பிகள் மீது விழுந்துள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், சாண்டிநல்லா பகுதியில் இருந்து ஊட்டிக்கு வரும் மின் கம்பிகள் மீது மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. குறிப்பாக, முள்ளிக்கொரை மற்றும் தீட்டுக்கல் பகுதிக்கு செல்லும் மின் கம்பிகள் மீது மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அடிக்கடி விழுகின்றன. இதனால், இப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனை சீரமைத்து கொடுக்க வேண்டும் எனவும் மின் வாரியத்திலும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சாண்டிநல்லாவில் இருந்து முள்ளிக்கொரை செல்லும் மின் வழித்தடம் மற்றும் துணை மின் நிலையத்திற்கு வரும் வழித்தடத்தில் மின் கம்பிகள் மீது விழுந்துள்ள மரங்கள், மரக்கிளைகள், மரப்பட்டைகள் ஆகியவைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று ஊட்டி மின் வாரிய ஊழியர்கள் மேல்கவ்வட்டி முதல் ஊட்டி வரையில் உள்ள மின் பாதையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்

Tags : Removal ,tree branches ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...