×

கொள்ளிடத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

கொள்ளிடம், நவ.1: கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் வட்டார அளவிலான ஊராட்சி செயலாளர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் சரவணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பபிதா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளை நோய்த்தடுப்பு அலுவலர் லியாகத்அலி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்தும், டெங்கு கொசுக்களை அழிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளித்து பேசினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர் கருணாகரன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காப்பாளர்கள் வட்டார அளவிலான ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dengue awareness meeting ,panchayat secretaries ,
× RELATED உடன்குடியில் ஊராட்சி செயலர்கள் கூட்டம்