ஓடம்போக்கி ஆற்றில் நாகை நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு

நாகை, நவ.1: நாகை நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதால் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை நகராட்சிக்கு குடிநீர் குருமனாங்குடியை அடுத்த ஓடாச்சேரி பகுதியில் இருந்து சிமெண்டு ராட்சத குழாய் மூலம் பூமிக்கு அடியில் கீழ்வேளூர் வழியாக கொண்டு செல்லப் படுகிறது. இந்த குடிநீர் குழாய் கீழ்வேளூரில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே தனியாக வழி அமைத்து செல்கிறது. ஓடம்போக்கி ஆற்றுபாலம் அருகே ஆற்றை கடக்கும் பகுதியில் இரும்பு குழாய் உள்ளது.

இந்த இரும்பு குழாய் இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாக அதிக அளவில் தண்ணீர் வீணாகி வருகிறது. வீணாகும் தண்ணீரால் நாகை நகராட்சி பகுதிக்கு செல்லும் தண்ணீர் அளவு குறைய வாய்ப்புள்ளது. உடன் நாகை நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Breakdown ,municipality ,Naga ,Odampoki River ,
× RELATED காரிப்பட்டியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு