×

சீர்காழி அருகே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

சீர்காழி, நவ.1: சீர்காழி அருகே வாணகிரி ஊராட்சி மீனவர் காலனியில் நடந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே வாணகிரி ஊராட்சி மீனவர்காலனி பேரிடர் பாதுகாப்பு மையத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். வாணகிரி மீனவ கிராம தலைவர் சிவபெருமாள், செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தை நல மருத்துவம், சித்த மருத்துவம், ஆய்வக பரிசோதனை, தடுப்பூசி போடுதல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் ஆகிய பணிகள் நடந்தன.

மருத்துவ அலுவலர்கள் பிரபாகரன், அனிதா, அமுதினி, சம்பத்குமார், சித்த மருத்துவ அலுவலர் பாரிராஜன், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்பனர், ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் துரை கார்த்திக் நன்றி கூறினார்.

Tags : camp ,
× RELATED மருத்துவ முகாம்