×

வீடுகளில் நோய் பரப்பும் கொசு இருந்தால் குடிநீர் துண்டிப்பு வேதை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

வேதாரண்யம், நவ.1: வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆய்வின்போது வீடுகளில் நோய்பரப்பும் கொசு இருந்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேதாரண்யம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொசுப்புழு ஒழிப்பு சிறப்பு பணியாளர்கள் ஆய்வின்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி, டிரம் முதலியவற்றில் கொசுப்புழு இருப்பது கண்டயறியப்பட்டால் அவர்களது வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு உடனடியாக துண்டிப்பு செய்யப்படும். மேலும் தொற்று நோய் பரப்பும் இடமாக தங்களது குடியிருப்பு கருதப்பட்டு பொது சுகாதார விதியின் கீழ் அபராதத்தொகை விதிக்கப்படுவதுடன் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்படும். எனவே கொசுப்புழு ஒழிப்பு சிறப்பு பணியாளர்கள் வீட்டிற்கு வரும்போது ஒத்துழைப்பு கொடுத்து வீட்டில் உபயோகமற்ற பாட்டில்கள், தகரப் பெட்டிகள், பாத்திரங்கள் தண்ணீர் தேங்கும் வகையான பொருட்களை அப்புறப்படுத்திடவும், தொற்று ஒழிப்பு பணியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : commissioner ,households ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...