போட்டி போட்டு செல்லும் வாகனங்களால் மருத்துவமனை சாலை கார்னரில் கடும் போக்குவரத்து நெரிசல்

கரூர், நவ. 1: வாகனங்கள் முந்திசெல்வதால் மருத்துவமனை சாலை கார்னரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைசாலை, வடக்குபிரதட்சணம் சாலை சந்திப்பில் மருத்துவமனை சாலையில் இருந்து செல்லும் வாகனங்களும், சர்ச்கார்னர் முதல் பேருந்து நிலையம், பேருந்து நிலைய பகுதியில் இருந்து சர்ச் கார்னர் பகுதிக்கு அப்பால் செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி வாகனங்கள் முந்தி செல்வதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால் காலை மாலை நேரங்களில் வாகனங்கள் முட்டி மோதுகின்றன. நெரிசலில் வாகனங்கள் சிக்கி வரிசைகட்டி நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Hospital Road Corner ,
× RELATED போட்டி போட்டு செல்லும் வாகனங்களால்...