×

கரூர் மாவட்டத்தில் தொடர் மழை

கரூர், நவ. 1: கரூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை தூறிக்கொண்டிருக்கிறது. நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை தூறியது. இரவு வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மழைஅளவு (மி மீட்டரில்):

கரூர் 6, அரவக்குறிச்சி 20, அணைப்பாளையம் 6, க,பரமத்தி 4, குளித்தலை 9, தோகைமலை6, கிருஷ்ணராயபுரம் 6.6., மாயனூர் 6, பஞ்சப்பட்டி 8.2, கடவூர் 13, பாலவிடுதி 18.4, மயிலம்பட்டி 11, மொத்தம் 114.20, சராசரி 9.52. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு நேற்று 25360 கனஅடிநீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் 24540 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. கட்டளைமேட்டு வாய்க்காலில் 200 கன அடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி, தென்கரை வாய்க்காலில் 200 கன அடி, கிருஷ்ணராயபுரம் 20 கன அடி, தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Tags : Showers ,Karur ,district ,
× RELATED கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி